Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. உழைப்பின் பயனை அடைவீர்கள்.. ஆதரவு கிடைக்கும்.!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கடந்த கால உழைப்பின் பயனை இன்று நீங்கள் அடையக்கூடும். எதிரி தொல்லையை சரி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டாரின் அன்பு பெறுவார்கள். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை, தீமைகள் பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளில் பிரச்சனைகள் நீங்கும்.

அலுவலகத்தில் உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். சக ஊழியரிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கொடுக்கல், வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனவரவில்  இன்று எந்த மாற்றமும் இல்லை. இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பயம் விலகிச்செல்லும். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க கூடும். இன்று  முயற்சிகளை செய்து பாடங்களைப் படியுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |