துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாகவே இருக்கும். புதிய பதவிகள், வாகனம் வசதி வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் உங்களுக்கு இன்றும் முன்னேற்றம் இருக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டியிருக்கும். படித்ததை எழுதிப் பார்ப்பது தான் ரொம்ப சிறப்பு. தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது, தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது. இன்று பயணங்களால் செலவு கொஞ்சம் இருக்கும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றியும் இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசனை செய்து செய்யுங்கள். அலட்சியம் கொள்ள வேண்டாம். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை துறை சார்ந்தவர்களுக்கும் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பெண்களுக்கு இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
அதிஷ்ட திசை : வடகிழக்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும்3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்