Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..சிக்கல்கள் அகலும்.. பணப்புழக்கம் அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று உறுதுணையாக அனைவரும் உங்களுக்கு செயல்படுவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் இன்று நல்ல முடிவை கொடுப்பதாகவே அமையும். ரொம்ப சிறப்பாகவே இன்று இருக்கும் நீங்கள் இன்று எதை எதிர்பார்த்து கொண்டிருந்தார்களோ அந்த நிகழ்வு சிறப்பாகவே நடைபெறும் செய்யும். செயல்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தன வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன்தொல்லை கொஞ்சம் தலை தூக்கலாம் அதை கொஞ்சம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவைகள் இருக்கக்கூடும். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் அமையும்.

அதுபோலவே இன்று உடல் ஆரோக்கியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும் கவலை வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றகரமான நிலையே செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |