Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…சிந்தனைகள் தோன்றும்.. உதவிகள் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே.! இன்று புதிய சிந்தனை மனதில் உருவாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகவே இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். புத்திரர் பெற்றோருக்கு பெருமைகளை சேர்த்து விடுவார்கள். பெண்கள் புத்தாடைகளை வாங்க கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும் கவலை வேண்டாம். அனைத்தும் சிறப்பை கொடுக்கும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுங்கள்.

வியாபார விருத்திக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ரொம்ப சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள் நினைவில் வைத்துக் கொள்ள உதவும், அதுபோலவே மனதையும் நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது நல்லது மிகவும் சிறப்பாகவே இருக்கும்.

தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் பொழுது பசும்பால் அருந்தி விட்டுச் செல்வது நல்லது படித்த பாடத்தை நினைவில் இருப்பதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |