துலாம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாம் நலமும் வளமும் பெருகும் இனிய நாளாக அமையும். தன வரவு கூடும். பயணங்களால் மனம் மகிழும். பெண்களும் தனக்கென தனி வீடும் அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை ஏற்படும்.
எந்த ஒரு சிக்கலான பிரச்சினைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் சிரமமில்லாமல் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்