துலாம் ராசி அன்பர்களே..! எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை தீர ஆலோசனை செய்து செய்யவேண்டும். சவால்களை நீங்கள் திறமையுடன் தான் சமாளிக்க வேண்டியிருக்கும். பலரும் வியந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செழித்து ஓரளவு வளரும். கூடுதல் பணவரவில் சேமிப்பை அதிகரிப்பது நல்லது. பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த தடைகள் முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்.
தொழில் வியாபாரத்தில் நண்பர்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவிகள் கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் காலதாமதம் இருக்கும். யாரிடமும் இன்று நீங்கள் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படி இருக்கும். உத்தியோகத்தில் இருந்து தொலைபேசி வழித் தகவல் சிறிய மாற்றங்களை உங்களுக்கு ஏற்படுத்தும். சரியான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
சரியான நேரத்திற்கு தயவுசெய்து தூங்கச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்