துலாம் ராசி அன்பர்களே…! நல்ல நாளாக அமையும்.
பிரச்சனைகள் எதுவும் இல்லை. தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடைப்படும் காரியம் கண்டு தன்னம்பிக்கை தளர வேண்டாம். முடிவுகளை யோசித்து எடுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வேலையில் இருக்க வேண்டாம். முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும்.பணம் கொடுக்கும் பொழுதும் சரி வாங்கும் பொழுதும் சரி சரியான முறையில் இருக்கின்றதா என சரிபார்த்து வாங்க வேண்டும். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை ஏற்படும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு எதுவும் வேண்டாம். இறைவனின் அருள் இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சினையும் சமாளித்து விடுவீர்கள். பயணங்கள் மூலம் நன்மையும் இருக்கு.
மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். காதலில் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். திருமண வாய்ப்பு கைகூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியேஅம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் பழுப்பு நிறம்.