துலாம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும், இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், கணவன் மனைவிக்கு இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.
பயணத்தின் பொழுது புதிய அனுபவத்தையும், புதிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள் அதில் எந்தவித மாற்றமுமில்லை. திருமண முயற்சியில் வெற்றியை இருக்கும், காதல் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், அதுமட்டுமில்லாமல் சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இன்று பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்