துலாம் ராசி அன்பர்களே… இன்று எதிர்பாராத பொருள் வரவு உ ண்டாகும். வழக்கமான பணியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.இன்று சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும்.
இன்று மனைவி வழியில் அனுகூலங்கள் வந்து சேரும்.சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக முடியும்.அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி புதிய பதவிகளைப் பெறுவார்கள், நல்ல வாய்ப்புகளும் வந்து சேரும். பெற்றோர் வழியில் இருந்த பகை நீங்கும்.வழக்குகள் சாதகமாகும்.காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும்,உங்களுடைய வசீகரமான பேச்சால் அனைவரையும் இன்று நீங்கள் கவர்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று குருபகவான் வழிபாட்டையும்,சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் அடர் நீல நிறம்