துலாம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். இன்று எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன், குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும்.
உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி கொடுக்கும் செலவு மட்டும் கொஞ்சம் கூடும் நிதானத்தை கடைபிடியுங்கள். நிதானமாக வாகனத்தில் செல்லுங்கள், அது போதும். இன்று சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் எதிர்பாராத முன்னேற்றங்கள் அடையக்கூடும். முட்டுக்கட்டைகள் அவர்களுக்கு இன்று விலகிச்செல்லும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கூடிய சூழல் அமையும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்