Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பயணத்தால் பலன் கிடைக்கும்.. கடுமையான உழைப்பு இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பயணத்தால் பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பெரிய  மனிதர்களிடம் தொடர்ந்து உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். சுறுசுறுப்பாக தான் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சரியான நேரத்திற்கு மட்டும் தூங்க முடியாத சூழல் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். யாரைப்பற்றியும் இன்று குறை சொல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.

வாக்குவாதத்தில் யாரிடமும் ஈடுபடவேண்டாம். நிதானத்தை கடைபிடியுங்கள், ஆன்மீக பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாகவும், ஆன்மீகத்திற்கு நீங்கள் மிக முக்கியமான செலவையும் ஏற்கக்கூடிய அளவிலும் இருக்கும். இன்று சமூகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் நாளாகவே இருக்கும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடிய சூழலும் இருக்கிறது. தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்லும் பொழுது பால் அருந்திவிட்டு செய்வது ரொம்ப நல்லது. மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொண்டாலே உங்களுடைய கருவி மிகவும் சிறப்பாகவே இருக்கும். அதற்கு நீங்கள் இரண்டு நிமிடம் தியானம் இருப்பது ரொம்பவே நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |