துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக தான் செயல்பட வேண்டும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு ஓரளவு புகழ்கூடும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள், பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாய்ப்புகள் இன்று வீடு வீடு தேடி வரக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கலாம். ஓரளவு இன்று மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானமாகச் செல்லவேண்டும், மிக முக்கியமாக யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் கொஞ்சம் கல்விக்காக போராட வேண்டிய இருக்கும். கடினமாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். இன்று இரண்டு நிமிடம் தியானம் இருந்து பாடங்களைப் படியுங்கள் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மன அமைதியை வளர்த்துக் கொள்வது நல்லது. மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்