Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..பொல்லாதவர்கள் விலகி செல்வார்கள்..கவனமுடன் செயல்படுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகி செல்லக்கூடும். தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல் படுவது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் உருவாகும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்வீர்கள்.

வாகனத்தில் மித வேகத்தில் செல்ல வேண்டும். கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். கடன் யாருக்கும் தயவுசெய்து ஏதும் கொடுக்க வேண்டாம். அதில் கவனம் இருக்கட்டும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உழைப்பு கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

முன்னேற்றமான சூழல் இருக்கும். கூடுமானவரை  ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் சிவப்பு ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் அனைத்தும் தோஷங்களும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |