Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மனக்கசப்புகள் நீங்கும்.. அலைச்சல் அதிகரிக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும், உற்சாகமான நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் மன திருப்தியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்சனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரும். அதேபோல் இன்று காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும்.

திருமண முயற்சிகள் மேற் கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாகவே இன்று நடக்கும். இன்று கல்விக்காக கடுமையாக உழைத்துதான் நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். கூடுமானவரை படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், மாணவர்கள் எப்பொழுதுமே துணிச்சலுடனும் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தேர்வுக்கு  தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான பயிற்சியை மேற்கொள்ளுங்கள், இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படியுங்கள். அதேபோல தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை நீங்கள் தயவு செய்து உண்ண வேண்டாம்.

பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்க செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |