துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும் நாளாகவே இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள், உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மன அமைதி கூடும் நாளாகவே இருக்கும். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
எதிர்பார்த்த பணவரவு இருக்கும், புதிய நபரிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். உறவினரின் உதவி கிடைக்கும் செலவு கொஞ்சம் கூடும். அதாவது தேவையான பொருட்களில் மட்டும் முதலீடு செய்வது ரொம்ப நல்லது, பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணத்தின் பொழுது வாகனத்தில் செல்லும்பொழுது கொஞ்சம் களைப்பு ஏற்படலாம், அதையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுங்கள்.
சரியான நேரத்திற்கு தயவுசெய்து தூங்கச் செல்லுங்கள், உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்து வருவீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் இன்று ஆர்வம் செல்லும். விளையாட்டு படிப்பில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்