Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள்…செலவுக்கு சேமிப்பு பணம் உதவும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எவருக்கும்  வாக்குறுதிகளை தயவு செய்து தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ் நிலையை நீங்கள் சந்திக்கக்கூடும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு தான் உடல் நலத்தை காக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.

வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட மனதில் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் அவ்வப்போது வந்து செல்லும். கணவன் மனைவிக்கு இடையே மன அழுத்தம் ஏற்படலாம். எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். தாய் தந்தையரின் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மனமகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |