துலாம் ராசி அன்பர்களே…. இன்று உடல் ஆரோக்கிய நிலை சீராக வைத்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கட்டுப்பாடு வேண்டும். ஏதாவது ஒரு நினைவில் மனம் அலைவதால் தெய்வ சந்நிதியில் அமைதி தேடலாம்.கூடுமானவரை இல்லத்தில் இறை வழிபாட்டை நடத்துங்கள் சிறப்பாக இருப்பீர்கள்,மனமும் அமைதியாக காணப்படும்.
பயண ஆர்வம் அதிகரிக்கும் சூழ்நிலை மாற்றத்தைக் கொண்டு நீங்கள் அடுத்த முடிவு எடுப்பது ரொம்ப நல்லது.வாடிக்கையாளரிடம் கவனமாக பேசுங்கள் வியாபார விருத்தி ஓரளவு இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள். சக ஊழியர்களின் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை.முக்கிய பொறுப்புகளை நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.யாரிடமும் பொறுப்புகளை மட்டும் ஒப்படைக்க வேண்டாம்.
அதே போல உங்களுடைய குடும்ப ரகசியங்களை தயவு செய்து வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். மற்றவரிடம் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவே சிறப்பை கொடுக்கும். நிதி மேலாண்மையில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும் பணத்தை செலவு பண்ணும் போது ரொம்ப கவனமாக செலவு பண்ணுங்கள். தேவையில்லாத விஷயத்தில் பணச் செலவு செய்து கொண்டு இருக்காதீர்கள்.
இ ன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்குமே.அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :தெற்கு
அதிஷ்ட எண்கள் :2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா