Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசி… வியாபாரத்தில் வேகம் பிறக்கும்…திட்டமிட்ட வேலைகள் சாதகமாக  முடியும்…

 

 

துலா ராசி அன்பர்களே…. உங்களை எவர் ஏமாற்ற நினைக்கிறார்களோ அவர்கள் இன்று விலகிச்செல்வார்கள்.மனைவிக்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக இருந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி வேகம் பிடிக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மன வருத்தம் ஏற்படும்.திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் தீமைகள் உண்டாகும் எதையும் கட்டுப்படுத்தி இருப்பதுதான் ரொம்ப நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக தான் முடியும்.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் தயவு செய்து அவர்களிடம் கோபப்பட வேண்டாம்.இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்த பின்னர் செய்வது ரொம்ப நல்லது.இன்று தடைகளை தாண்டிதான் முன்னேறி செல்வீர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுகமாகத் தான் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல

Categories

Tech |