துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சீதாராமம் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் அனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சீதாராமம். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிட்டுள்ளது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இத்திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கின்றது. சீதாராமன் திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.