Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானின் புதிய பட அப்டேட்…. வெளியான ட்ரெய்லர்….!!!!!!!!!

இயக்குனர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் சீதாராமம். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். மேலும் ராஸ்மிகா மந்தானா, சுமந்த்  என பல முக்கியமாக பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கின்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த சூழலில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சீதா மகாலட்சுமி இடம் ராமின் கடிதத்தை கொண்டு சேர்ப்பதற்காக ராஷ்மிகா எடுக்கும் முயற்சிகளை மையப்படுத்தி உருவாகிய இந்த ட்ரெய்லர் இணையதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Categories

Tech |