பிருந்தா இயக்கிய ஹே சினாமிகா திரைப்படத்தின் விமர்சனம்.
துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் குரூப் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹேர் சினாமிகா என்ற திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனராக பிரபல நடன இயக்குனர் பிருந்தா அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் பிரிந்தாவுக்கு நல்ல ஒரு தொடக்கம்.
இத்திரைப்படமானது பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இப்படத்தில் அதிதி தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து உள்ளார். இந்தப்படத்தில் மூன்று பேருக்கும் சமமான பங்களிப்பை கொடுத்துள்ளதால் படம் நன்றாக இருக்கிறது. மேலும் காதல், காமெடி இணைந்திருப்பதால் சலிப்படையாமல் பார்க்க செய்கின்றது. இதிலும் படத்தின் பாடலும் பின்னணி இசையும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. இக்கதை சற்று பின்னடைவாக இருந்தாலும் நடிகர்களின் நடிப்பு மற்றும் காதல், காமெடி உள்ளிட்டவை படத்தை தூக்கி நிறுத்துகின்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் பிருந்தாவுக்கு நல்ல ஒரு அறிமுக படம்.