திரையரங்கு உரிமையாளர்கள் துல்கர் சல்மானின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் சல்யூட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக துல்கர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் துல்கர் சல்மானின் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது சல்யூட் திரைப்படத்தை பிப்ரவரி 14-ம் தேதிக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. இந்தப்படத்தை மார்ச் 30-ம் தேதிக்குள் ஓடிடி வசம் ஒப்படைக்க வில்லை என்றால் பெரிய சிக்கல் ஏற்படும். இதன் காரணமாகத்தான் சல்யூட் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் துல்கர் சல்மான் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொண்டனர்