Categories
ஆன்மிகம் இந்து

“துளசி மாடம் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும்”…. ஏன் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்துக்களால் மிக முக்கியமாக வழிபடப்படுவது துளசிச் செடியாகும். ஏனெனில் அது மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. துளசியை மாடத்தில் வளர்த்து அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, அதன் முன் கோலமிட்டு தினமும் சுற்றி அக்காலத்திலிருந்தே நம் நாட்டின் வழக்கமாக உள்ளது.

துளசி மாடத்தைக் கோயில்களிலும் முற்றங்களிலும் வைத்து வளர்ப்பார்கள்.இந்த துளசி ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்போது காண்போம்.

இது இந்துக்களின் பழக்கமாக இருந்தாலும், அனைவரும் அவரவர் வீட்டில் துளசிச் செடியை வளர்ப்பது மிக அவசியம், ஏனெனில் நிறைய மருத்துவ குணங்கள் துளசிச்செடி கொண்டுள்ளது. துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமான ஆக்ஸிஜனை வெளியிடும் குணம் கொண்டது. ஆகவே அது அதைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும். அதிகாலை வேளையில் அதைச் சுற்றி வரும் பழக்கம் இதன் காரணமாகவே ஏற்பட்டது.

அதிகாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணி வரை இயற்கையாகவே காற்று மண்டலத்தில் அதிக ஆக்ஸிஜன் இருக்கும், இதனால் நாம் அப்போது துளசிச் செடியைச் சுற்றி வந்தால், பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம்.

அதுமட்டுமா? மருத்துவத்திலும் துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லா ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் துளசி கண்டிப்பாக இருக்கும். நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், பிரச்சனைகளுக்குத் துளசியைப் போன்ற மருந்து வேறு கிடையாது. துளசி சாற்றோடு தேன், இஞ்சி சாறு சேர்த்துக் குடித்தால் நெஞ்சு கபம் காணாமல் போய்விடும்.

இத்தகைய நன்மைகள் பல உள்ளதால்தான் பழங்காலம் முதல் துளசிச் செடியை வளர்த்து அதை வழிப்படும் முறையினை நாம் கொண்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல், இச்செடியை வளர்ப்பதால் துஷ்ட சக்திகள் வீட்டில் நுழையாது, விஷ ஜந்துக்களும் வீட்டில் அநேகமாக நுழையாது. நம் உடலில் உல்ல எதிர்மறை சக்தி குறைந்து, இறையாற்றல் நிரப்பும். துளசியை வழிப்படும் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். எனவே நம் நமது வீட்டில் துளசிச் செடியை முறையாகப் பராமரித்து வணங்கினால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும்.

Categories

Tech |