பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை கண்மணி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கண்மணி துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.