நடிகை ரம்யா பாண்டியன் மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இறுதி போட்டி வரை சென்று 4-வது இடத்தை பிடித்தார்.
— SriRamya Paandiyan (@iamramyapandian) April 29, 2021
தற்போது இவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது . மேலும் நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை ரம்யா பாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.