Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துள்ளாட்டம் போட்ட வடமாநில வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசிய ரயில்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!

மதுரையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ரயிலினால் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகே, தனியார் நிறுவனமான தண்டவாளத்திற்கு பொருத்தப்படும் சிலிப்பர் கட்டைகளை தயாரிக்கும் கம்பெனி அமைந்துள்ளது. இக்கம்பெனியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபம்குமார்பட்றோ என்ற வாலிபரும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் மது குடித்துவிட்டு போதையில் செய்வதறியாது அப்பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டு மகிழ்ச்சியாக துள்ளாட்டம் போட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் சுபம்குமாரை அடித்து தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |