Categories
மாநில செய்திகள்

” துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்களே வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று  பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ” துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். அதேபோல இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தடைப்பட்ட கல்வியை தாராளமாக வழங்கி முழுமைப் படுத்த வேண்டிய முழு பொறுப்பும் உங்கள் கையில் தான் இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |