Categories
உலக செய்திகள்

“துள்ளி திரியும் குட்டி காண்டாமிருகம்”…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…. சுவாரஸ்ய தகவல் இதோ….!!!

மிருகக்காட்சி சாலை ஒன்றில் பிறந்து 3 மாதங்களான காண்டாமிருக குட்டியை பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் Burgers என்ற  மிருகக்காட்சி சாலை ஒன்று அமைந்துள்ளது. அதில் காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள் போன்ற பல மிருகங்கள் உள்ளன. அந்த மிருக காட்சியில் பிறந்து மூன்று மாதங்களே ஆன காண்டாமிருக குட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் ஸ்டார் என்று பெயர் கொண்ட அந்த காண்டாமிருக குட்டியை பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டார் குட்டியின் தற்போதைய எடை 200 கிலோவுக்கும்  மேலாக இருக்கும். இந்த குட்டி உடைய தாயின் எடை 2000 கிலோ ஆகும். மேலும் மிருகக்காட்சி சாலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காண்டாமிருக குட்டியை கண்டு மகிழ்கின்றனர்.

Categories

Tech |