Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூக்கத்தில் அலறிய சிறுமி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே ஞாறோடு பகுதியில் சுதீப் – கோபிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விபிஷிகா (8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் விபிஷிகா அதிகாலை 2 மணியளவில் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அதன்பிறகு விபூசிகா திடீரென அலரி துடித்தபடி மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் விபிஷிகாவை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து இரணியல் காவல்நிலையத்தில் சுதீப் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |