தூக்கத்தில் கடலில் விழுந்த கப்பலோட்டியை 14 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு கொண்டுவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லித்துவேனியாவை சேர்ந்தவர் விடாம் பெரெவெர்டிலோவ் ( 52 வயது ). இவர் நியூசிலாந்தில் இருந்து பிரிட்டன் தீவுகளுக்கு செல்லும் கார்கோ கப்பலில் கப்பலோட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4 மணிக்கு நியூஸிலாந்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் இரவு வேலை முடித்து விட்டு உடல் களைப்பாக இருந்ததால் காற்று வாங்குவதற்காக கப்பலின் வெளிப்பகுதியில் உள்ள விளிம்பில் உட்கார்ந்து இருந்திருக்கிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தூங்கி விடவே கடலில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து ஆறு மணி நேரத்திற்கு பிறகு கப்பலில் அவர் இல்லை என்பதை அறிந்த மற்றவர்கள் இது குறித்து பிரெஞ்சு கடற்படை விமானத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இத்தகவலை அடுத்து பாலினேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் அக்கப்பலோட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அப்போது கப்பலோட்டி யாரோ விட்டு சென்ற மிதவைப்படகில் ஏறி அமர்ந்து அபாயக்குரல் சத்தம் எழுப்பியுள்ளார் அச்சத்தத்தை கேட்டு பின் தொடர்ந்த விமானிகள் மலை 6 மணிக்கு அக்கப்பலோட்டியை மீட்டுகொண்டுவந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.