ராஜஸ்தான் மாநிலம் பாத்வா பகுதியில் வசிப்பவர் புர்காராம். 42 வயதான இவர் சொந்தமாக கடை வைத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தூங்கி கொண்டு இருந்துள்ளார். கடையை திறந்து வைத்தும் சில நாட்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனால் அவருடைய வீட்டில் அசதியின் காரணமாக தூங்குகிறார் என்று நினைத்துள்ளனர். நாள் போக்கில் பல நாட்களாக எழாமலேயே தூங்கியுள்ளார்.
சாப்பிடுவதற்கு கூட தூக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி வந்துள்ளனர். இதையடுத்து வருடத்திற்கு 300 நாட்கள் அவர் தூங்கியுள்ளார். இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த நபருக்கு வருடத்திற்கு 300 நாட்கள் தூங்கும் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சில சமயங்களில் அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது தூங்கி விடுவதாகவும், இதனால் பல குடும்பப் பிரச்சினை ஏற்படுவதாகவும் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.