குஜராத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பியதால் மனைவிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
குஜாராத் மாநிலம் தல்தெஜ் பகுதியை சேர்ந்தவர் பாவ்னா சவ்கான் (வயது 45).இவர் சில நாள்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து 15-ம் தேதி இரவு 11 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக வீட்டின் வாசல் கதவை பலமுறை தட்டி உள்ளார். அவரது கணவன் கதவை திறக்கவில்லை . இதனால் கோபம் அடைந்த மனைவி கணவனை சத்தமாக அழைத்துள்ளார்.
அப்படியும் தூக்கத்தில் இருந்த கணவர் கதவை திறக்க வரவில்லை . கதவை மேலும் சத்தமாக தட்டி உள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்த கணவர் கான்ஷியாம் கவ்கான் இரவில் வந்து என் தூக்கத்தை இப்படி தொந்தரவு செய்கிறாயே என மனைவியை பலமாக அடித்து உதைத்துள்ளார்.
பாவ்னா சவ்கானின் பலமான சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை கணவரிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து தன்னை அடித்த கணவர் மீது பாவ்னா சவ்கான் போலீஸீடம் புகார் அளித்தார். கணவர் மீது கிரிம்னல் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.