மிதமான சூடான பால்:
பருப்பு வகைகள்:
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் மெக்னீசியம், ட்ரைட்டோஃபேன், மெலாடோனின் போன்ற தாதுக்கள் உள்ளன. இன்சோம்னியா அதாவது தூக்கமின்மை இருப்பவர்கள் இதுபோன்ற பருப்பு வகைகளைக் கணிசமாக எடுத்துக்கொள்ளுவது நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அப்புறம் என்ன பாஸு ஒரு கை அள்ளுங்க நசக்கு நசக்குனு மெல்லுங்க.
கிவி பழங்கள்:
கிவி பழங்களில் வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு, ஊட்டச்சத்து அதிகம். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், மெலாடோனின், ஃபோலேட் (folate), மெக்னீசியம் போன்றவை உறக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை, பெண்களுக்கும் நல்லது.
மீன் வகைகள்:
மீன்களில் வைட்டமின்- டி, ஒமேகா-3 அமிலம் போன்றவை உள்ளன. இவை உடலில் செரோடெனின் சுரக்க உதவும். இதன் விளைவாக நீங்கள் தரமான உறக்கத்தைப் பெறுவீர்கள்.
இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
உண்ணும் உணவைத் தாண்டி, உங்கள் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைக் கொண்டுவருவது, ஆரோக்கியமான உடலுக்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் உதவும். அவை என்ன தெரியுமா?
- உறங்குவதற்கு முன்பாக கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்தல்
- காஃபைன் இருக்கும் டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்த்தல்
- உறங்குவதற்கு முன்பாகப் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது
- அதிக காரசாரமான அல்லது அதிக இனிப்பு மிகுந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது
- உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுப்பது
- தினமும் போதுமான உடற்பயிற்சியை மேற்கொள்வது
- உறங்குவதற்கு 2-3 மணி நேரம் முன்பாக உணவு எடுத்துக்கொள்ளுங்கள்
- மனதை நிதானமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்
- பகலில் உறங்குவதைத் தவிருங்கள். 15- 20 நிமிடங்கள் குட்டித் தூக்கம் போதுமானது.