அகமதாபாத்தில் இருக்கும் மோதேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழாவுக்கு சச்சின் , கபில்தேவ்வை அழைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கபில் தேவ் , சச்சின் டெண்டுல்கர் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு அளிக்கப்படவில்லை என்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். இன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த தகவலில் சச்சின் , கபில்தேவ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக உலககோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் வரிசையில் கபில் தேவ் இருக்கின்றார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் இவர்கள் இருவருக்கும் அழைப்பு இல்லை என்பது நாம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறக்கும் இந்தியா இந்தியாவுக்காக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளை பெற்றுக் கொடுத்த சச்சின் , கபில்தேவ்வை புறக்கணிக்க கூடாது என்று பல்வேறு ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். மேலும் சச்சின் , கபில்தேவ் போன்ற வீரர்களை வைத்து மைதானத்தை திறக்க வேண்டுஎன்ன்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.