கேரளாவை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன் (55) – அனிதா (40). இந்த தம்பதியின் மகன்கள் ஆதித்ய ராஜ் (24) அமிருதராஜ்(20). அமிர்தராஜ் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியாகியும் அவர் வேலைக்கு வராததால் அவரை தேடி கடை உரிமையாளர் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ராஜேந்திரன் வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கி கிடந்துள்ளார். பின்பு அருகில் மனைவி மற்றும் 2 மகன்ளும் படுகாயங்களுடன் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன கடை உரிமையாளர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கடன்தொல்லை ஒன்றும் இல்லை என்றும், ராஜேந்திரன் தான் மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, பின் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.