திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள தண்ணீர் குளம் என்ற கிராமத்தில் ஜோதி ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 38 வயதுடைய சந்திரசேகர் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி மாலினி என்ற மனைவி உள்ளார். சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுபற்றி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.