உத்தரகாண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் முபசில் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் 14 வயது சிறுமி நேற்று பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அர்மன் அன்சாரி என்ற நபரை கைது செய்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், கட்டிட தொழிலாளியான அன்சாரி திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை குறி சிறுமியை பழைய வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அர்மன் அன்சாரி கைது செய்தனர். இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை செய்த பின் மகளை அர்மன் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.