Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகன்….. துக்கத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட தாய்… அரங்கேறிய சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மகன் தூக்குப்போட்டு இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லீலாவதி என்பவரின் மகன் மோகன் கவுடா. இவர் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து கதறிய லீலாவதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில் மருத்துவமனையிலிருந்து லீலாவதி வெளியில் வரும்போது காரில் மோதி தலையில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தாய் மற்றும் மகனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் விவகாரத்தில் தனது நண்பர்களுடன் மோகன் கவுடா சண்டை போட்ட காரணத்தினால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மகன் இறந்து விட்டதால் மனம் உடைந்த லீலாவதி கார் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விஜய நகர சட்டம்-ஒழுங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |