Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மாணவி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. தேனியில் பரபரப்பு….!!

வாலிபர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி இந்திராநகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு வனராணி(43) என்ற மனைவியும், புவனேஸ்வரி, ஷிவானி(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரி திருமணமாகி கணவருடன் வடபுதுபட்டியில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகள் ஷிவானி போடி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று வனராணி வெளியே வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷிவானி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த வனராணி உடனடியாக போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷிவானியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விசாரணையில் ஷிவானிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்காள் வசிக்கும் வடபுதுப்பட்டியில் உள்ள உறவினரான அருண்குமார்(23) என்ற வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதற்கிடையே அருண்குமார் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஷிவானிக்கும், அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தான் காதலித்த அருண்குமார் தன்னை ஏமாற்றி விட்டதை நினைத்து மனமுடைந்த ஷிவானி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக வாட்ஸ்-அப் மூலம் அருண்குமாருக்கு ஏற்கனவே தகவல் அனுப்பியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வடபுதுப்பட்டியை சேர்ந்த அருண்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |