மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த சின்ச்வாத்தை சேர்ந்த 30 வயது பெண் அவருடைய கள்ளக்காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன் லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சின்ச்வாட் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீப் ஷிண்டே கூறுகையில், “புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அந்தப் பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். அடுத்த நாள் அவர்களது அறையை லாட்ஜ் பணியாளர்கள் தட்டியபோது, உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அந்த பெண் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார்.
அவரது கள்ளக்காதலன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இருவரது உடல்களிலும் எவ்வித உடைகளும் இல்லை. நிர்வாண நிலையில் இருந்துள்ளனர். அவர்களது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதலன் மீது காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக அந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. ஏற்கனவே குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் கணவர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.