பண்ருட்டி அருகில் உள்ள அங்கு செட்டிபாளையம் முருகன் கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் வினோத் பாபு. இவர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள ஒரு கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி ரமணி. தற்போது இவர் திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கவில்லை என்று கூறி அவரது அலுவலக மேலாளர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர். அதன்பிறகு தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தினத்தந்தி உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வினோத்பாபுவின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும் அவர் பணிபுரியும் பயிற்சி மையத்தின் மேலாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரில்யில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீச சமாதான பேச்சுவார்த்தை நடந்து கலந்து போக செய்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து ரமணி பண்ரூட்டி போலீசாரிடம் புகார் செய்தார். அதில், வினோத் பாபுவை அவர் வேலை செய்து வரும் நிறுவனம் மேலாளர், ‘நீ எல்லாம் எதற்கு வேலைக்கு வருகிறாய் வேலை விட்டு ஒழிந்து போ என்று திட்டினார். மேலும் நாளைக்கு வேலைக்கு வரக்கூடாது என்று அவர் ஃபோனில் கூறியதாக எனது கணவர் என்னிடம் கூறினார். அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்று அவர் தூக்கில் பிணமாக கிடந்தார். எனவே எனது கணவரின் இறப்பு குறித்து எனது கணவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.