Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தூக்கி எறிய போறாங்க… MLAகளுக்கு அமித்ஷா மிரட்டல்…. பரபரப்பு குற்றச்சாட்டு …!!

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளிடம் நேரடியாக பேசி, அமித்ஷா மிரட்டினார் என்றும், அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குன்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும், காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை பாஜக ஒழிக்க  முயற்சிக்கிறது என்றும் கூறினார். எதிர்வரும் தேர்தலில் பாஜகவை  தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |