சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதனால் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . யார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.