உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் ராஜ் கிஷோர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் சோபிதா குப்தாவை சஞ்சீவ் குப்தா என்ற நபருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் பல நாட்களாக தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் சோபிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பெண்ணின் பெற்றோர் தனது மகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு தனது மருமகளிடம் தனது மகள் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என கேட்டுள்ளனர். அப்போது சஞ்சீவ் குப்தா தனது மொபைலில் வீடியோ ஒன்றை காண்பித்துள்ளார் . அந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து சோபிதாவின் தந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் சோபாவின் கணவரை போலீசார் கைதுசெய்துள்ளனர் . மனைவி தூக்கு போட முயன்றபோது கணவன் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.