உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைகல்மேடு காலணியை சேர்ந்த செல்வம் (52) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி வெண்ணிலா(44). கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு மகள்கள் விஷ்ணு பிரியா (22), நேத்ராதேவி (20), மனோரஞ்சிதம் போன்றோர் இருக்கின்றனர். இதில் விஷ்ணு பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. நேத்ராதேவி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மணமுடைந்த காணப்பட்டு வந்தார்.
இந்த சூழலில் நேத்ரா தேவி நேற்று முன்தினம் விஷ்ணு பிரியாவின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நேத்ரா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரிந்துரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.