பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். நேற்று முன்தினம் இரவு பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றபோது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து விட்டார்கள். இந்த நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். பின் மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.