Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்” படுகாயமடைந்த 17ஊழியர்கள்…. ராணிப்பேட்டையில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் 17 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேசாவரம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது முன்னால்  சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது .

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 17 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |