Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தூக்க கலக்கம்….. கார் கவிழ்ந்து தீப்பிடித்தது எப்படி?…. கண்ணாடியை உடைத்த பண்ட்….. நொடியில் நடந்த சம்பவம்..!!

டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு தனியாக பென்ஸ் காரை ரிஷப் பந்த் கண் அயர்ந்து ஓட்டி வந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் தீபிடித்திருந்த நிலையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பென்ஸ் (Mercedes-AMG GLE43 Coupe) காரை ஓட்டி வந்துள்ளார். ​​தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், புத்தாண்டை தனது குடும்பத்துடன் கழிக்கவும் பந்த் டெல்லியிலிருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் ஹரித்வாரில் பயங்கர சாலை விபத்தில் சிக்கினார். தகவல்களின்படி, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக டிவைடரில் மோதியது, அதன்பின் உடனடியாக அவர் அருகிலுள்ள சாக்சம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பந்த் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் கிரிக்கெட் வீரர் குணமடைய தேவையான அனைத்து உதவிகளையும் பெற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனையின் மருத்துவர் கூறினார். இதற்கிடையே முழுமையாக குணமடைந்து வர வேண்டும் என முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான தருணம் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளான பின், அவர் ரத்த காயத்துடன் நிற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரிசப் பண்டை மீட்டு அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை சிலர் அளிக்கின்றனர். அவர்கள் உடனடியாக ரிசப் பண்டுக்கு கம்பெளி போர்வை உள்ளிட்டவை வழங்கும் காட்சிகளும் வீடியோவில் வெளியாகி உள்ளது.

தொடர்ச்சியாக நிற்க கூட முடியாத சூழலில் அவர் இருக்கிறார். அவருடைய நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரத்தம் வழிவதும் அந்த வீடியோவில் தெரிகிறது. பேச முடியாத நிலையில் கூட நின்று கொண்டிருக்கிறார். அவர் நின்று கொண்டிருக்க கூடிய மிக நெருங்கிய தொலைவில்தான் அவருடைய கார் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது, அந்த காட்சிகளும் வீடியோவில் பதியாகி உள்ளன. இதனை அடுத்து தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினர் வந்து ரிசப் பண்டை அடையாளம் கண்டு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே ரிஷப் பண்ட் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தூக்க கலக்கத்தில் இருந்த பண்ட் வேகமாக சாலையின் உடைய தடுப்பு சுவரில் கார் மோதியதில் கார் கவிழ்ந்து தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது.. இதையடுத்து ரிசப் பண்ட் துரிதமாக செயல்பட்டு காரின் உடைய கண்ணாடியை உடைத்து காரில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனை தொடர்ந்து கார் மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது.

https://twitter.com/FalconBangalore/status/1608740187856834561

 

Categories

Tech |