Categories
தேசிய செய்திகள்

“தூக்க மாத்திரை கொடுத்து காதல்” பெற்றோரே மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தலை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்த பெண் சானியா ரிஹான் (20) என்பது தெரிய வந்தது. இவர் வாசிம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்‌. இந்த காதல் விவகாரம் சானியாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சானியா இரவு நேரத்தில் டீயில் தூக்க மாத்திரை கலந்து தன்னுடைய குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டு  காதலனை சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சானியாவின் தாயாருக்கு சந்தேகம் ஏற்படவே டீயை குடிக்காமல் அவர் இருந்துள்ளார். இதனையடுத்து சானியா வீட்டில் இருந்து வெளியேறும் போது அவரை கையும் களவுமாக பிடித்துக் கொண்டார். இதை தொடர்ந்து சானியாவுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதால் சானியாவை தாயும் தந்தையும் சேர்ந்தே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு கழுத்தை ஒரு பக்கமும் தலையை மற்றொரு பக்கமும் வீசியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சானியாவின் தந்தை சாகித் குரோஷி தன்னுடைய மகளை கொலை செய்ததில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |