தூங்கி கொண்டிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ள நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார். இதனால் மாரிமுத்துவின் மனைவி மல்லிகா அவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் வீட்டில் தனியாக வசித்து வந்த மாரிமுத்து திடீரென மூக்கில் ரத்தம் வழிந்தபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.